மிதுனம்
நவம்பர் 16 முதல் 30 வரை ராசி பலன்கள்
தனது சாமர்த்தியத்தின் மூலமாக எந்த கடினமான விஷயங்களையும் எளிதாக முடிக்கும் மிதுன ராசி அன்பர்களே! இந்த காலகட்டத்தில் ராசியில் ராகு இருக்க ராசியை குரு - சுக்கிரன் - சனி ஆகியோர் பார்க்கிறார்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். ராசிக்கு ஐந்தில் சஞ்சரிக்கும் ராசியாதிபதி புதன் மனதில் இருந்த கவலையை போக்கி நிம்மதி தருவார். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கலாம். வெளியூர் பயணம் அதன் மூலம் அலைச்சல் உண்டாகலாம்.
தொழில் ஸ்தானாதிபதி குருவே ராசியைப் பார்க்கிறார். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். தேவையான பண உதவி கிடைக்கலாம். தொழில் தொடர்பாக எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும்.
அவர்களை அனுசரித்துச் செல்வது நன்மையைத் தரும். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்வதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வீடு, வாகனம் தொடர்பான சுபச்செலவுகள் ஏற்படலாம். உதவிகள் செய்யும்போது ஆலோசித்து செய்வது நல்லது.
பெண்களுக்கு எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.
கலைத்துறையினருக்கு உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம். நற்பெயரும் புகழும் உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு இருக்கும்.
அரசியல்துறையினருக்கு வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களை சந்திக்க நேரலாம். எப்படிப்பட்ட பிரச்னை வந்தாலும் சமாளித்துவிடும் திறமை அதிகரிக்கும்.
மாணவர்களுக்கு: கல்வியில் கூடுதல் கவனம் தேவை. ஒரு முறைக்கு இருமுறை பாடங்களை படிப்பது நல்லது.
பரிகாரம்: ஸ்ரீ ஆஞ்சநேயரை புதன்கிழமையில் வெண்ணெய் சாற்றி வணங்க மனதில் தைரியம்
உண்டாகும். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்.