ஆங்கில மாத ராசிபலன்

மேஷம்


நவம்பர் 16 முதல் 30 வரை ராசி பலன்கள்


எதிலும் தைரியமாக முடிவெடுக்கும் மேஷ ராசி அன்பர்களே! உங்களுக்கு எல்லோரையும் எளிதில் வசீகரிக்கும் திறமை இருக்கும். இந்த காலகட்டத்தில் தனவாக்கு குடும்ப ஸ்தானத்தை ராசிநாதன் செவ்வாய் பார்ப்பதால் உங்கள் வாக்கு வன்மையால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். ராசிக்கு 7ல் சஞ்சாரம் செய்யும் புதன், அவருடன் சேர்க்கைபெற்ற ராசிநாதன் செவ்வாய் மூலம் எதிர்ப்புகள் விலகும். பணவரத்து அதிகரிக்கும்.

தொழில் ஸ்தானத்தை ராசிநாதன் செவ்வாய் தனது நான்காம் பார்வையால் பார்ப்பதால் தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும்.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனக்கசப்பு மாறும். பிள்ளைகள் உங்களது ஆலோசனைகளை கேட்பார்கள்.

பெண்களுக்கு நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். கலைத்துறையினருக்கு பணவரத்து இருக்கும். வெளியூர் பயணங்கள், அலைச்சல் ஆகியவை இருக்கும். தொழில் முன்னேற்றபாதையில் செல்லும்.

அரசியல்துறையினருக்கு அரசு தொடர்பான  காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கட்டளை இடுகின்ற பதவி கிடைக்கும்.

மாணவர்களுக்கு: கல்வி தொடர்பான கவலைகள் நீங்கும். சக மாணவர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை குறையும்.

பரிகாரம்: ஸ்ரீமகா கணபதியை பூஜித்து வழிபட்டு வர எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். காரிய தடைகள் நீங்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்.