ரிஷபம்
நவம்பர் 16 முதல் 30 வரை ராசி பலன்கள்
எந்த சூழ்நிலையிலும் தனது பக்குவமான அணுகுமுறையின் மூலம் காரியங்களை சாதித்துக் கொள்ளும் ரிஷப ராசி அன்பர்களே! இந்த காலகட்டத்தில் தனவாக்கு குடும்ப ஸ்தானத்தை குரு - ராசிநாதன் சுக்கிரன் - சனி ஆகியோர் பார்க்கிறார்கள். பணவரத்து கூடும். செயல்திறமை அதிகரிக்கும். ராசியை பார்க்கும் சூரியனால் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள்.
தொழில் ஸ்தானத்தை அதன் அதிபதி சனியே பார்ப்பதால் தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்வது பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். தேவையான நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து காணப்படும். நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து அவர்களது நன்மதிப்பை பெறுவீர்கள். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவுடன் எதிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள்.
பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். கலைத்துறையினருக்கு புதிய முயற்சி கை கொடுக்கும். மகிழ்ச்சியான நிலை காணப்படும்.
அரசியல்துறையினருக்கு பிணக்கு நீங்கி ஒன்று சேர்வார்கள். எதிர்காலம் பற்றிய எண்ணம் மேலோங்கும். எந்த செயலையும் தைரியமாக செய்து முடிப்பீர்கள்.
மாணவர்களுக்கு: கல்வியில் திறமை அதிகரிக்கும். விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். ஆசிரியர் ஆதரவு கிடைக்கும்.
பரிகாரம்: நந்தீஸ்வரரை வணங்கி வருவது எதிர்பார்த்த காரியம் நடந்து முடியும். எதிலும் சாதகமான நிலை காணப்படும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி.