அன்னை இயற்கை மருத்துவம் யோகா அறிவியல் கல்லூரி மாணவர்கள் தேசிய யோகாசன போட்டிக்கு

கும்பகோணம்



கும்பகோணத்தை அடுத்த கோவிலாச்சேரியில் அமைந்துள்ள அன்னை இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் கல்லூரி மாணவர்கள் தேசிய அளவிலான யோகாசன போட்டி, 2019&-2020க்கான தேர்வு தூத்துக்குடி மாவட்டம் காமராஜர் கல்லூரியில் யோகா கலாச்சார சமூகம் மற்றும் அனைத்திந்திய யோகா கூட்டமைப்பு சார்பில் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு பல்வேறு பரிசுகளை வென்றனர். 
மேலும் இப்போட்டியில் சிறப்பாக ஆசனங்களை செய்துகாட்டி மாணவன் பி.சுபாஷ் முதன்மை மாணவனாக தேர்ந்தெடுக்கப்பட்டு அவருடன் த.காவியன், வி.சுபாஷினி, சா.காவியா ஆகியோர் பெங்களுரில் நடைப்பெற உள்ள தேசிய அளவிலான யோகா போட்டி 2019-2020க்கு தேர்வு ஆகினர். மற்ற பிரிவுகளில் தி.அருள்மேனி, ஐ.யுவஸ்ரீ, ஜோ.ஜோஸ் டாலர், சு. நிருத்திஷ்வேல், சா.காவியா, பி.சுபாஷ், க.காவியன், ர.மீனா, பி.ஷாலிதேவ், வி.சுபாஷினி, ஜே.மெ.நவீன் மோனிகா, எலங்பம் ரோஹித் சிங், அக்கோய்ஜம் யோகேஷ் சிங், செ.ஜெ.மோலிகா, மு.ஸ்வேதா, வி.அரிதா ஆகியோர் பல நிலை பரிசுகளை தட்டி சென்றனர். இந்த மாணவர்களை சிறப்பு விருந்தினர் தமிழ்நாடு கிராமிய கலை முன்னேற்ற கழக தலைவர் திரு.எஸ்.ஜெகஜீவன் மற்றும் தமிழ்நாடு யோகா கழக செயலாளர் ஆறுமுகம் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பு செய்தனர். 
இப்பரிசுப்பெற்ற மாணவர்களை அன்னை கல்வி குழுமத் தலைவர் எம். அன்வர் கபீர் அன்னை கல்வி குழும செயலர் எம்.ஐ.ஹ{மாயூன் கபீர் அன்னை இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் கல்லூரி முதல்வர் மருத்துவர் ஜோதிநாயர் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்கள் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டனர்.