சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பெறப்பட்ட, இரண்டு கோடி கையெழுத்து படிவங்களை, தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் , ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தனர்.
குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக, கையெழுத்து இயக்கம் நடத்த, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையில், ஜன., 24ல் நடந்த கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவானது. இதன்படி, இம்மாதம், 2 முதல், 8 வரை, தமிழகம் முழுவதும் கையெழுத்து வேட்டை நடந்தது. ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள், மாநிலம் முழுவதும், மக்கள் கூடும் இடங்களிலும், வீடு, வீடாகவும் சென்றும், 2 கோடியே, ஐந்து லட்சத்து, 66 ஆயிரத்து, 82 கையெழுத்துகள் பெற்றனர்.சென்னை அறிவாலயத்தில் உள்ள அண்ணாதுரை, கருணாநிதி சிலை அருகில், ஸ்டாலின் தலைமையில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைத்து கையெழுத்து படிவங்களையும், ஜனாதிபதிக்கு, விமானம் வாயிலாக, அனுப்பி வைத்தனர்.
" alt="" aria-hidden="true" />