சபரிமலை வழக்கில் சீராய்வு மனுக்கள் மீது விசாரணை இல்லை -உச்சநீதிமன்றம்

டெல்லி: சபரிமலை வழக்கில் சீராய்வு மனுக்களை விசாரிக்க போவதில்லை என்றும் கேட்கப்பட வேண்டிய கேள்விகளை மட்டுமே விசாரிக்க இருக்கிறோம் எனவும் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு தெரிவித்துள்ளது.


சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிப்பது இல்லை என்ற நடைமுறை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அமர்வு, அந்த கோவிலுக்கு செல்ல அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 28-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.


 


சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதித்து வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் 60-க்கும் மேற்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, இந்த மேல்முறையீட்டு வழக்கை 9 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14-ந் தேதி உத்தரவிட்டது.


.


" alt="" aria-hidden="true" />


 


இந்த அமர்வில் நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷன், எல்.நாகேஸ்வர ராவ், எம்.எம்.சந்தானகவுடர், எஸ்.ஏ.நசீர், ஆர்.சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய், சூர்யகாந்த் இடம்பெற்றுள்ளனர்.இந்நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வு அந்த மனுக்கள் மீது இன்று விசாரணை நடத்தியது. வழக்கு தொடர்பாக நீதிபதிகள் கருத்து தெரிவிக்கையில், சபரிமலை வழக்கில் சீராய்வு மனுக்களை விசாரிக்க போவதில்லை. தேவையில்லாத வாதங்களை கேட்கமுடியாது. இந்த விவகாரத்தில் கேட்கப்பட வேண்டிய கேள்விகளை தான் விசாரிக்க இருக்கிறோம். மேலும், கோவில்களை பெண்களை அனுமதிக்கலாமா என்பதை மட்டும் விசாரிக்கப்போவதில்லை. கோவில், மசூதி போன்ற வழிபாட்டு தளங்களில் பெண்கள் நுழைவது வழிபாட்டு முறைகளுடன் சேர்ந்த விஷயமா, என்பதை கேட்கவிருக்கிறோம், என்றனர்.